என் பெயரில் போலி கணக்கு! யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என பிரபல நடிகர் வேண்டுகோள்: எனது இன்ஸ்டாகிராம் கணக்கு போன்று போலி கணக்கு உருவாக்கி மர்ம நபர் ஒருவர் நான் பணம் கேட்பது போல் கேட்கிறார்.
தன்னுடைய பெயரில் போலியான சமூகவலைதள கணக்கு தொடங்கப்பட்டு பணம் வசூல் செய்யப்படுவதாக நடிகரும், இயக்குனருமான ரவி மரியா பொலிஸில் முறையீடு செய்துள்ளார்.
தமிழில் ஆசை ஆசையாய், மிளகா படங்களை இயக்கியவர் ரவி மரியா.
இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார்.
வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரவி மரியா தன் பெயரில் போலி சமூக வலைதள கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
எனது இன்ஸ்டாகிராம் கணக்கு போன்று போலி கணக்கு உருவாக்கி மர்ம நபர் ஒருவர் நான் பணம் கேட்பது போன்று பல நண்பர்களிடம் பணம் கேட்டுள்ளார்.
அதை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதற்காக காவல் துணை ஆணையாளர் அலுவலகத்தில் முறையீடு செய்துள்ளேன் என ரவி மரியா கூறியுள்ளார்.