தமிழகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட இலங்கை அகதி: பொலிஸார் விசாரணை

OruvanOruvan

தமிழகத்தில் இலங்கை 45 வயதான புகலிட கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் உள்ள நகராட்சி நாளங்காடி கட்டடம் அருகே சனிக்கிழமை காலை குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த தேக்காட்டூா் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்தது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.