கனடா கொலைகள் இலங்கையில் எதிரொலிக்கின்றன: காமினி அமரகோனுக்கு நேர்ந்த துயரம், தவிக்கும் குடும்பத்தினர்

OruvanOruvan

கடந்த சில வாரங்களுக்கு முன்னரே, காமினி அமரகோன் ஒட்டாவா புறநகர்ப் பகுதியான Barrhaven இல் உள்ள தனது புதிய வீட்டின் புகைப்படங்களை இலங்கையில் உள்ள நண்பருக்கு அனுப்பியிருந்தார்.

அமரக்கோனின் பால்ய நண்பர் ரிஸ்வி மொஹமட், “இன்னும் ஒரு மாதத்தில் இலங்கை வந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கான விசாவிற்கு விண்ணப்பிக்க இருந்ததாக” குறிப்பிட்டுள்ளார்.

எனினும், 40 வயதான காமினி அமரகோன் கடந்த வாரம் கொல்லப்பட்டார். ஒட்டாவா வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமாக கொலை சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் அமரகோனும் ஒருவர்.

இந்த தாக்குதலில் தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர், அவர்களுடன் அமரகோனும் வசித்து வந்துள்ளார்.

ஒட்டாவா வரலாற்றில் மிக மோசமான கொலை

கடந்த சில வாரங்களுக்கு முன்னரே, காமினி அமரகோன் ஒட்டாவா புறநகர்ப் பகுதியான Barrhaven இல் உள்ள தனது புதிய வீட்டின் புகைப்படங்களை இலங்கையில் உள்ள நண்பருக்கு அனுப்பியிருந்தார்.

அமரக்கோனின் பால்ய நண்பர் ரிஸ்வி மொஹமட், “இன்னும் ஒரு மாதத்தில் இலங்கை வந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கான விசாவிற்கு விண்ணப்பிக்க இருந்ததாக” குறிப்பிட்டுள்ளார்.

எனினும், 40 வயதான காமினி அமரகோன் கடந்த வாரம் கொல்லப்பட்டார். ஒட்டாவா வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான கொலை சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் அமரகோனும் ஒருவர்.

இந்த தாக்குதலில் தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர், அவர்களுடன் அமரகோனும் வசித்து வந்துள்ளார்.

கடந்த வார தாக்குதல்களின் அதிர்ச்சி அலைகள் இலங்கையில் எதிரொலிக்கின்றன, அங்கு பாதிக்கப்பட்டவர்களும், குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் விரிவான குடும்ப உறவுகளைக் கொண்டிருந்தனர்.

19 வயது இளைஞரின் கொடூர செயல்

அண்மையில்தான் கனடாவுக்கு வந்திருந்த அமரக்கோன், இலங்கையில் உள்ள தனது முழு குடும்பத்திற்கும் ஒரே ஆதாரமாக இருந்து வந்துள்ளார்.

மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் வயதான தாய் மற்றும் சகோதரி உட்பட அனைவரையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு அமரகோனுக்கு இருந்தாக ரிஸ்வி மொஹமட் கூறியுள்ளார்.

அமரக்கோனின் தாயார் பகுதியளவு செயலிழந்துள்ளார் என மொஹமட் தெரிவித்தார்.

கடந்த வாரம் அமரகோனுடன் 35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்க மற்றும் அவரது நான்கு பிள்ளைகளும் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் தர்ஷனி டிலந்திகாவின் கணவர் தனுஷ்க விக்கிரமசிங்க படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து கனடாவுக்கு மாணவனாக வந்து விக்கிரமசிங்க குடும்பத்துடன் குடியேறிய 19 வயதுடைய Febrio De-Zoysa என்பவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் மீது 6 முதல் நிலை கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமரக்கோன் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிந்தார். அங்குதான் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தனுஷ்கா விக்ரமசிங்கவை சந்தித்தார்.

வசதியான வாழ்க்கை வாழ்ந்த அமரகோன்

"அவர் நன்றாக சம்பாதித்தார். அவர் ஒரு வசதியான வாழ்க்கை வாழ்ந்தார்,” இவை அனைத்தையும் மீறி அமரகோன் கனடா செல்ல விரும்பியதுடன், சில வருடங்களுக்கு முன்பே அதற்கான நகர்வைத் திட்டமிடத் தொடங்கினார் என்றும் மொஹமட் கூறினார்.

கனடாவில், அமரகோன் விக்கிரமசிங்கவுடன் மீண்டும் சேர்ந்ததுடன், தனது முன்னாள் சக நண்பர் குடும்பத்துடன் வசித்து வந்த Barrhaven பகுதியில் குடியேறினார்.

சில மாதங்கள் மட்டுமே கனடாவில் இருந்த போதிலும், அமரக்கோன் இங்கு ஒரு புதிய வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான பணிகளை விரைவாக தொடங்கினார்.

அவர் ஒரு தொழில்முனைவோராக இருந்தார், மேலும் பல சிறு வணிகங்களைத் தொடங்கினார்.

அமரக்கோன் கனடாவில் தனது புதிய வாழ்க்கையின் புகைப்படங்களை சமூக ஊடக கணக்குகளில் அடிக்கடி வெளியிட்டார்.

மூன்று வாரங்களுக்கு முன்பு அமரகோனுடன் கடைசியாக பேசியதாக மொஹமட் கூறினார். அப்போது, கனடாவில் உள்ள தனது குடும்பத்தின் மீதான நம்பிக்கை குறித்தும் பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது மனைவி மற்றும் குழந்தைகளை கனடாவிற்கு அழைத்துச் செல்ல அமரகோன் முயன்றதாக மொஹமட் மேலும் தெரிவித்துள்ளார்.