அமெரிக்காவில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர் பலி: உடலை கொண்டுவர நடவடிக்கை, மின்கலத்தால் ஏற்பட்ட தீபரவல்

OruvanOruvan

அமெரிக்காவின் நியூயார்க்கின் ஹார்லனில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஃபாசில் கான் என்ற 27 வயது இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

இ-பைக்கில் இருந்த லித்தியம்-அயன் மின்கலம் அடுக்குமாடி கட்டிடத்தில் தீயை ஏற்படுத்தியதாக உள்ளூர் தீயணைப்புத் துறையை மேற்கோள் காட்டி டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞரின் சடலத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கொலம்பியா ஊடகவியல் கல்லூரி பட்டதாரியான ஃபாசில் கான், கட்டிடத்திலிருந்து மீட்கப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக டெய்லி நியூஸ் கூறியுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ பரவியது, அதைத் தொடர்ந்து மக்கள் ஜன்னல்களில் இருந்து குதிக்கத் தொடங்கினர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.