யாழ் வல்வை பட்டப் போட்டியில் முதலிடம் பெற்ற இளைஞன் தாய்லாந்தில் புதிய சாதனை: வியந்து போன உலகநாடுகள்

OruvanOruvan

Jaffa Vinodhan

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மாபெரும் பட்டம் போட்டியில் முதலிடம் பிடித்த விநோதன் தாய்லாந்திலும் சாதனை புரிந்து உலகவாழ் மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ளார்.

வல்வை பட்டப் போட்டித் திருவிழாவில் போர்தாங்கி ஆகாயவிமானத்தை பறக்கவிட்டு உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் விநோதன் வியக்க வைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து தாய்லாந்தில் 36 நாடுகள் பங்குபற்றிய பட்டக் காட்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு, இரண்டு வித்தியாசமான பட்டங்களை பறக்கவிட்டுள்ளார்.

தாய்லாந்தில் விநோதனின் சாதனை

கடந்த ஐந்து நாட்களில் விநோதன் தாய்லாந்துக்கு சென்று இரண்டு பட்டங்களை கட்டி முடித்து அதனை ஒப்பணை பார்த்து பல நாட்டு மக்கள் முன்னிலையில் பறக்க விட்டுள்ளார்.

அத்துடன் அங்கு பங்குப் பற்றிய பல நாட்டுக் கலைஞர்களும் விநோதனின் கைவண்ணப் பட்டத்தினை பாராட்டியுள்ளனர்.

உலக வரலாற்றில் இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தி தாய்லாந்தில் நடைபெறும் பட்டப் காட்சியில் பங்குபற்றுவது இதுவே முதன்‌முறை என்பதால் விநோதனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

OruvanOruvan

Jaffa Vinodhan

OruvanOruvan

Jaffa Vinodhan

OruvanOruvan

Jaffa Vinodhan

OruvanOruvan

Jaffa Vinodhan

OruvanOruvan

Jaffa Vinodhan

OruvanOruvan

Jaffa Vinodhan