இனப் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தல்: ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெற்ற நீதிக்கான போராட்டம்

OruvanOruvan

Protest in European union

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் இனப் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெல்ஜியத்தில் அமைந்துள்ள பிரஸ்ஸல்ஸ் (Brussels) ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக கண்டனப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

புலம்பெயர் தமிழர்கள் குழுவொன்று பிரித்தானியாவிலிருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை நோக்கி சைக்கிள் பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் ஒருகட்டமாக ஐரோப்பிய ஒன்றியம் முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இம்மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55வது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இந்நியலையில், 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் இனப் படுகொலைகளுக்கு 15 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் யாரும் பொறுப்பேற்கவில்லை

பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள் தங்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலைத் தேடுகிறார்கள்.

காணாமல் போனவர்களில் பலர் அரச படைகளிடம் சரணடைந்தவர்கள்” இம்மக்களின் நீதிக்கான குரலாகவே இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என ஏற்ப்பாடாளர்கள் தெரிவித்துள்ளனர்.