சுவிஸில் மொட்டுக்கட்சியினரை சந்தித்த ஜனாதிபதி: ஐ.தே.கட்சியினர் அதிருப்தியில்

OruvanOruvan

President Ranil Wickremesinghe Getty Images

சுவிஸர்லாந்தின் டாவோஸ் நகரில் கடந்த 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நடைபெற்ற 54 வது உலக பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க, இத்தாலியில் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர்கள் உட்பட பல அமைப்புகள் விடுத்த கோரிக்கை நிராகரித்த ஜனாதிபதி,மிலானோவில் உள்ள பொதுஜன பெரமுனவின் கிளை அதிகாரிகளை சந்தித்துள்ளதாக இத்தாலியில் வசிக்கும் ஐக்கிய தேசியக்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கட்சியை விட்டு விலகி, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து, கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக மாறிய நேரத்தில் கட்சியின் தலைவருக்கு உறுதுணையாக இருந்து,கட்சி வலுப்படுத்த உதவி கட்சியினர், தலைவரை சந்திக்க விடுத்த கோரிக்கையை நிராகரித்து விட்டு, மொட்டுக்கட்சியின் கிளை அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்த சந்திக்க சந்தர்ப்பத்தை வழங்கியமை தமது செய்த அநீதி என ஐக்கிய தேசியக்கட்சியின் இத்தாலி ஒருங்கிணைப்பாளர் ரொஷான் லோ தெரிவித்துள்ளார்.

இரட்டை குடியுரிமை பெற்றுக்கொள்ளும் போது, இலங்கையர்கள் பெருந்தொகை பணத்தை செலவிட வேண்டியுள்ளமை, இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை இத்தாலி அனுமதிப்பத்திரமாக மாற்றும் உடன்படிக்கையை புதுப்பிக்காமை, இலங்கை தூதரகம் வழங்கும் ஆவணங்களுக்கு கூடுதலான பணத்தை செலவிட நேரிட்டுள்ளமை உட்பட பல பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே ஜனாதிபதி சந்திக்க முயற்சித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையை பொருளாதார ரீதியாக முன்னேற்றி பொருளாதாரம் பலம் கொண்ட நாடாக இலங்கை மாற்ற வேண்டும் என்ற உண்மையான தேவை ஜனாதிபதிக்கு இருக்குமாயின் வெளிநாட்டில் உள்ள எங்களது பங்களிப்பை ஏன் பெற்றுக்கொள்ளவில்லை என்பது மிகப் பெரிய பிரச்சினை எனவும் ரொஷான் லோ கூறியுள்ளார்.