இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மற்றுமொரு இலங்கையர் உயிரிழப்பு: மின்சார ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது வேன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

OruvanOruvan

A Sri Lankan youth died in an accident

இத்தாலியின் ரோம் நகரின் கொர்னேலியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி இரவு இடம்பெற்ற விபத்தில் ரோம் நகரில் வசிக்கும் மார்கோ மன்னகே என்ற 25 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21ஆம் திகதி இரவு தனது மின்சார ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது வேன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞன் இத்தாலியின் ரோம் தலைநகரில் பிறந்து பெற்றோருடன் வசித்து வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரோம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இந்த விபத்து ஏற்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இத்தாலியின் பேர்கமோ நகரில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த ஒருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மாரவில,கட்டுநேரிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான சஞ்ஜீவ பிரதீப் பெர்னாண்டோ என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.