தனுஷின் 'கேப்டன் மில்லர்': 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்' என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

OruvanOruvan

Captain miller

நடிகர் தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வர் கூட்டணியில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் ஆங்கிலேயர் காலத்தில் நடக்கும் கதையை கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத் திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படம் 10ஆவது லண்டன் தேசிய விருதுக்கான 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்' என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது.