'ரத்னம்' திரைப்பட ப்ரமோஷன் பணிகள் ஆரம்பம்: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 04.04.2024

'ரத்னம்' திரைப்பட ப்ரமோஷன் பணிகள் ஆரம்பம்

இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'ரத்னம்'. இத் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 26ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரமோஷன் வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. படத்தின் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஏந்திய எல்.இ.டி வேன்கள் தமிழ்நாடு முழுவதுமுள்ள 25 மாவட்டங்களுக்கு பயணிக்கவுள்ளது.

OruvanOruvan

ஒன்லைனில் புடவை விற்ற சேரன் திரைப்பட நடிகை

மலையாள நடிகையான நவ்யா நாயர், தான் ஒருமுறை அணிந்த மற்றும் புதிதாக வாங்கி அணிய முடியாத புடவைகளை ஒன்லைனில் விற்பனை செய்து, அதிலிருந்து கிடைத்த பணத்தை காந்திபவனுக்கு நன்கொடையாக வழங்கி, மேலும் காந்தி பவன் சிறப்பு பள்ளிக்கும் ரூபாய் 1 இலட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

வெளியானது 'விடாமுயற்சி' திரைப்பட கார் சேஸிங் வீடியோ

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகின்ற நிலையில், தற்போது இப்படத்தின் கார் சேஸிங் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அருண் விஜயுடன் இணையும் சிம்பு பட நடிகை

திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் அவரது 36ஆவது திரைப்படத்தின் கதாநாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

OruvanOruvan

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படாது - போனி கபூர்

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் இவ்வாறு கூறியுள்ளார். “ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படாது என நான் நினைக்கிறேன். நான் உயிரோடு இருக்கும் வரையில் அதற்கு அனுமதிக்க மாட்டேன்” எனவும் கூறியுள்ளார்.

'சீயான் 62' இல் இணையும் சார்பட்டா பரம்பரை நடிகை

இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் 'சீயான் 62' திரைப்படத்தில் சார்பட்டா பரம்பரை துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.

OruvanOruvan

'சக்கரமுத்தே' பாடல் யூடியூப்பில் வெளியானது

நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ரெபேல். இத் திரைப்படம் கடந்த மார்ச் 22ஆம் திகதி வெளியான நிலையில், தற்போது இத் திரைப்படத்தின் பாடலான 'சக்கரமுத்தே' என்ற பாடலின் வீடியோவை படக்குழுவினர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.