பிரபுதேவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய கோட் திரைப்படத்தினர்: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 03.04.2024

பிரபுதேவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய கோட் திரைப்படத்தினர்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் பிரபுதேவாவுக்கு கோட் திரைப்படத்தினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ரீ ரிலீஸாகும் கில்லி திரைப்படம்

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு கில்லி திரைப்படம் வெளிவந்தது. இந்நிலையில், வெளியாகி 20 வருடங்களின் பின்னர், மீண்டும் வருகின்ற ஏப்ரல் 20ஆம் திகதி இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

OruvanOruvan

திரைப்படமாகும் யுவராஜ் சிங்-இன் வாழ்க்கை வரலாறு

தனது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதை திரைப்படமாக எடுக்க உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.

சொந்த சுயசரிதையில் நடிகர் , இயக்குநர் , தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக தன்னை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குநரான விஜய்குமார் பேரன்

இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீத்தாவின் மூத்த மகனான ஸ்ரீ ராம், ஹம் (HUM)என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். 1 மணி நேரம் யூடியூப் தளத்தில் ஓடும் இத் திரைப்படத்தில் ஸ்ரீராம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.

OruvanOruvan

ஏப்ரல் 09ஆம் திகதி வெளியாகும் 'ஜோக்கர் 2' ட்ரெய்லர்

டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் ஹாக்கின் ஃபீனிக்ஸ் நடித்த திரைப்படம் ஜோக்கர். இந்நிலையில் இத் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'ஜோக்கர்: ஃபாலி அ டியூக்ஸ்' (Joker: Folie a Deux) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 09ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

'Mr. Zoo Keeper' படத்தின் ரிலீஸ் திகதியை வெளியிட்ட புகழ்

ஜே. சுரேஷ் இயக்கத்தில் குக் வித் கோமாளி புகழ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் Mr.Zoo Keeper. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இத் திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், வரும் மே மாதம் 03ஆம் திகதி இத் திரைப்படம் வெளியாகவுள்ளதை புகழ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வில்லனாக மிரட்ட வரும் பிக்பொஸ் புகழ் ரொபர்ட் மாஸ்டர்

இயக்குநர் டிப்ரீ அரவிந்த் தேவ் ராஜ் இயக்கத்தில், நான்சி ஃப்ளோரா தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் 'நெவர் எஸ்கேப்'. ஹொரர் த்ரில்லராக உருவாகும் இத் திரைப்படத்தில் நடன இயக்குநர் ரொபர்ட் வில்லனாக நடித்துள்ளார்.

OruvanOruvan

'சியான் 62' வெளிவரும் புது அப்டேட்

எஸ்.யு. அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு தற்போதைக்கு 'சீயான் 62' என பெயரிட்டுள்ளனர். இந்தத் திரைப்படத்டதின் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் 'சியான் 62' திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகவுள்ளது.