ஏப்ரல் 8ஆம் திகதி வெளியாகிறது 'புஷ்பா 2' டீசர்: இன்றைய சினிமா
ஏப்ரல் 8ஆம் திகதி வெளியாகிறது 'புஷ்பா 2' டீசர்
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர், வருகின்ற ஏப்ரல் 08 ஆம் திகதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் பேரிழப்பு - பிதாமகன் நடிகர் காலமானார்
பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து புகழ் பெற்ற நடிகர் விஸ்வேஷ்வர ராவ், இன்று அதிகாலை உடல் நலக் குறைவினால் காலமானார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இவர், சீரியல்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கூடைப்பந்து போட்டியில்'குர்ச்சி மடத்த பெட்டி' பாடலுக்கு நடனமாடிய கலைஞர்கள்
திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள திரைப்படம் குண்டூர் காரம். இந்தப் படத்தில் வரும் குர்ச்சி மடத்த பெட்டி பாடல் ரசிகர்களைக் கவர்ந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் நடந்துவரும் என்.பி.ஏ கூடைப்பந்து போட்டியின்போது நடனக் கலைஞர்கள் 'குர்ச்சி மடத்த பெட்டி' பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
'விண்டேஜ் லவ்' பாடலின் க்ளிம்ஸ் வீடியோ வெளியானது
இளன் இயக்கத்தில் பிக்பொஸ் புகழ் கவின் நடிக்கும் திரைப்படம் 'ஸ்டார்'. இந்நிலையில் ஸ்டார் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'விண்டேஜ் லவ்...' என்ற பாடலின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் வரும் 04ஆம் திகதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
விமல் படத்தை வெளியிடவுள்ள வெற்றிமாறன்
போஸ் வெங்கட் எழுதி இயக்கும் 'மா.பொ.சி' என்ற திரைப்படத்தில் விமல் நடிக்கிறார். கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடந்துவரும் நிலையில், 'மா.பொ.சி' திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதற்காக மரண வெயிட்டிங்? ராயன் பட அப்டேட்
தனுஷ் இயக்கி நடிக்கும் 'ராயன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், ராயன் திரைப்பட புதிய போஸ்டரில் தனுஷ் மற்றும் செல்வராகவன், தனுஷ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா, தனுஷ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷான் உள்ளிட்டோரின் புகைப்படங்களை வெளியிட்டு, 'எந்த கோம்போ ஸ்க்ரீன்ல பாக்க மரண வெயிட்டிங்?' என பதிவிடப்பட்டுள்ளது.
'டீன்ஸ்' திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது
இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் குழந்தைகளை மையமாகக் கொண்ட திரைப்படமாக 'டீன்ஸ்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இத் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.