'தலைவர் 171' இற்கு 'கழுகு' என பெயர் சூட்டப்பட்டுள்ளது: இன்றைய சினிமா
'தலைவர் 171' இற்கு 'கழுகு' என பெயர் சூட்டப்பட்டுள்ளது
லோகேஷ் இயக்கத்தில் 'தலைவர் 171' என்ற திரைப்படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இந்நிலையில் ரஜினியின் இந்தத் திரைப்படத்துக்கு 'கழுகு' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1981ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'கழுகு' என்ற திரைப்படம் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
வாங்கிய விருதை ஏலத்தில் விட்டேன் - விஜய் தேவரகொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டா, யூடியூப் தளமொன்றுக்கு கொடுத்த பேட்டி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அந்த பேட்டியில், “சிறந்த நடிகருக்காக தான் வாங்கிய விருதை ரூபாய் 25 இலட்சத்துக்கு ஏலம் விட்டதாகவும், அதிலிருந்து கிடைத்த பணத்தை தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கினேன்” என்றும் கூறியுள்ளார்.
ஏப்ரல் 12 முதல் ஓடிடியில் 'பிரேமலு' திரைப்படம்
கிரிஷ் இயக்கத்தில் கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி வெளியான திரைப்படம் பிரேமலு. 3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத் திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றதையடுத்து, வருகின்ற 12ஆம் திகதி முதல் இத் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை சரண்யா மீது காவல்துறை புகாரளித்த பக்கத்து வீட்டுப் பெண்
பிரபல சினிமா திரைப்பட நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது அவரது பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஸ்ரீதேவி போலிஸில் புகார் கொடுத்துள்ளார். ஸ்ரீதேவி தனது காரை எடுப்பதற்காக வீட்டின் இரும்பு கேட்டை திறந்தபோது குறித்த கேட் நடிகை சரண்யாவின் காரை உரசியுள்ளது. இதனால் நடிகை சரண்யா ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து ஸ்ரீதேவி, சரண்யா மீது விருகம்பாக்கம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
வெளியானது 'மஞ்சும்மல் பாய்ஸ்' தெலுங்கு ட்ரைலர்
இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் 'மஞ்சும்மல் பாய்ஸ்'. இத் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 6ஆம் திகதி தெலுங்கில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் தெலுங்கு ட்ரைலர் வெளியாகியுள்ளது.
'ஸ்டார்' திரைப்பட க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகிறது
இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'ஸ்டார்'. இந்தத் திரைப்படத்தின் 2ஆவது பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகிறது.
'ஒயிட் ரோஸ்' பட பாடல் வெளியானது
கயல் ஆனந்தி நடித்துள்ள ஒயிட் ரோஸ் திரைப்படத்தின் 'ஐ ஹேவ் அரைவ்ட்' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.