பாலா – ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து குடும்ப பெண்ணுக்கு செய்த உதவி: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 30.03.2024

பாலா – ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து குடும்ப பெண்ணுக்கு செய்த உதவி

KPY பாலா – ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து கணவனை இழந்த ஏழை பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளனர்.

தானமாக கொடுக்கப்பட்ட நடிகர் பாலாஜியின் கண்கள்

நேற்றிரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பின் காரணமாக, நடிகர் பாலாஜி மரணமடைந்தார். இந்நிலையில் முன்னதாக டேனியல் பாலாஜி அவரது கண்களை தானம் செய்திருந்தார். அதனால் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இல்லத்துக்கு சென்ற மருத்துவர்கள் அவரது கண்களை தானம் பெற்றுள்ளனர்.

'அடி கட்டழகு கருவாச்சி' பாடல் வெளியானது

பி.வி.ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'கள்வன்'. இத் திரைப்படத்தின் 'அடி கட்டழகு கருவாச்சி' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

'உயிர் தமிழுக்கு' திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது

ஆதம்பாவா தயாரித்து, இயக்கி, இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள 'உயிர் தமிழுக்கு' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ராமராஜனின் புதிய அவதாரம் 'சாமானியன்' ட்ரைலர்

ராகேஷ் இயக்கத்தில் ராமராஜன் நடித்துள்ள திரைப்படம் 'சாமானியன்'. இளைராஜா இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

'சூது கவ்வும் 2' முதல் பாடல் வெளியானது

எம்.எஸ்.அர்ஜூன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'சூது கவ்வும் 2'. சமீபத்தில் இத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்ற நிலையில், தற்போது இந்தத் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.