விவாகரத்து செய்துவிட்டு மறுமணத்துக்கு தயாரான ஷங்கர் மகள்: மாப்பிள்ளை யார் தெரியுமா?
பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் தென்னிந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர்.
தனது பிரமாண்ட படைப்பினால் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படவைத்தவர். தமிழில் இவர் இயக்கிய அணைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான்.
அதுமட்டுமல்லாமல் கமலின் இந்தியன், விக்ரமின் அந்நியன், அர்ஜுனின் முதல்வன் இப்படி இவர் இயக்கிய படங்கள் எல்லாம் வசூலிலும், விமர்சனம் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.
அவரின் மூத்த மகள் பெயர் ஐஸ்வர்யா, இரண்டாவது மகள் பெயர் அதிதி ஷங்கர். இதில் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வளம் வருகின்றார்.
அந்தவகையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2021ம் ஆண்டு அதாவது கொரோனா காலகட்டத்தில் திருமணம் நடைபெற்றது.
பாலியல் சர்ச்சையில் சிக்கிய முதல் கணவன்
புதுச்சேரியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரன் தான் மாப்பிள்ளை.
ரோஹித் தாமோதரன் கிரிக்கெட் வீராங்கனைகளுடன் தவறாக நடந்துகொண்டதாக இவரின் மேல் புகார் எழுப்பப்பட்டது.
பின்னர் விசாரணையில் எல்லாம் உண்மை என தெரியவந்ததும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் இவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது ஷங்கருக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது.
இதனால் மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்வதில் மும்முரம் காட்டி வந்தார்.
யார் இந்த தருண் கார்த்திக்?
அதன்படி உதவி இயக்குநர் தருண் கார்த்திக் என்பவருடன் இரண்டாம் திருமணத்திற்கு ஐஸ்வர்யா தயாரானார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் தான் நடைபெற்றது.
அந்தவகையில் திருமணத்திற்கான ஏற்பாடு தற்போது தடபுடலாக நடைபெற்று வருகிறது.
ஐஸ்வர்யா மணமுடிக்கப்போகும் தருண் கார்த்திக் யார் என்று பார்த்தால் இவர் சில படங்களில் உதவி இயக்குநராகி பணியாற்றியுள்ளார்.
அதேபோல் பாடலாசிரியர் மற்றும் பின்னணி பாடகராகவும் பல திறமைகளுக்கு சொந்தக்காரர்.
இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் திருமணத்திற்கான வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளார். மேலும் முன்னணி பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுக்கும் வேலைகளில் இயக்குநர் ஷங்கர் மும்முரமாக இருக்கின்றார்.