வேட்டையாடு விளையாடு வில்லன் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

OruvanOruvan

Actor Daniel Balaji

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் அதிரடி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக தனியார் சென்னை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி 48 ஆவது வயதில் உயிரிழந்தார்.

வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி காக்க காக்க,வேட்டையாடு விளையாடு மற்றும் பைரவா போன்ற படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட வில்லன் நடிகர். இவரது திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளது.