நாளை வெளியாகிறது 'ரத்னம்' திரைப்பட செகண்ட் சிங்கிள்: இன்றைய சினிமா
நாளை வெளியாகிறது 'ரத்னம்' திரைப்பட செகண்ட் சிங்கிள்
இயக்குநர் ஹரி இயக்கத்தில், விஷால் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ரத்னம்'. இத் திரைப்படத்தின் முதல் சிங்கிள் சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் நாளை இதன் செகண்ட் சிங்கிள் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
'சென்னை சிட்டி கேங்ஸ்டர்' திரைப்பட மோஷன் போஸ்டர்
விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேசவ் இணைந்து இயக்கவுள்ள வைபவ், அதுல்யா ரவி உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படமான 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
'தி ஃபேமிலி ஸ்டார்' திரைப்பட ட்ரெய்லர் வெளியானது
விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் இணைந்து நடித்துள்ள 'தி ஃபேமிலி ஸ்டார்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 8ஆம் திகதி வெளியாகவுள்ளது.
சசிகுமார் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளாரா?
சிறந்த திரைப்படங்களை கொடுக்கும் இயக்குநர் சசிகுமார் இயக்கத்தில் நடிகை நயன்தாரா ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமாக இது இருக்கப்போவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
சொகுசு காரை மகளுக்கு பரிசளித்த ரோபோ ஷங்கர்
இந்திரஜா ரோபோ ஷங்கருக்கும் கார்த்திக்கிற்கும் கடந்த மார்ச் 24ஆம் திகதி திருமணம் நடந்தது. இந்நிலையில் மகளுக்கு சுமார் 19 இலட்சம் மதிப்புள்ள ஹோண்டா எலிவேட் காரை சீதனமாக கொடுத்துள்ளார் நடிகர் ரோபோ ஷங்கர்.
'களவாணி பசங்க' பாடல் வரிகள் வெளியாகின
பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கள்வன். இந்தப் படத்தின் களவானி பசங்க என்ற பாடலின் வரிகளடங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
'கல்யாண சத்தம் சத்தம்' வரிகளடங்கிய வீடியோ வெளியானது
விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பேமிலி ஸ்டார். இந்தத் திரைப்படதின் முதல் பாடலான 'கல்யாண சத்தம் சத்தம்' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.