கமல் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாரா அசோக் செல்வன்?: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 27.03.2024

கமல் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாரா அசோக் செல்வன்?

1988ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சத்யா திரைப்படம், தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்றாற்போல் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் அதில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் எனவும், போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இப் படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மல் பாய்ஸ்'

சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பெபரவரி 22ஆம் திகதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். பெருமளவில் அனைவராலும் பேசப்பட்ட இத் திரைப்படம் தற்போது வருகின்ற ஏப்ரல் 6ஆம் திகதி தெலுங்கில் வெளியாகவுள்ளது.

OruvanOruvan

Manjummal boys

நடிகை அதிதி ராவை இரண்டாவது திருமணம் செய்த நடிகர் சித்தார்த்?

தன்னுடைய நீண்ட நாள் காதலியான அதிதி ராவை நடிகர் சித்தார்த் கரம்பிடித்து உள்ளார். இவர்களது திருமணம் தெலங்கானாவில் உள்ள வனபர்த்தியில் நெருங்கிய உறவினர்களுடன் நடைபெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

'அக்கரன்' திரைப்படத்தில் கதாநாயகனாக எம்.எஸ்.பாஸ்கர்

நகைச்சுவை நடிகர் மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் எம்.எஸ்.பாஸ்கர். தற்போது எம்.எஸ்.பாஸ்கர் 'அக்கரன்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ உரிமத்தை ஐங்கரன் நிறுவனம் பெற்றுள்ளது.

OruvanOruvan

Akkaran movie

''தி கோட் லைப்' படம் பார்த்து மனம் குளிர்ந்த கமல்

''தி கோட் லைப்” படம் பார்த்து மனம் குளிர்ந்து உள்ளேன். இந்த படம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படம் வெகுசிறப்பாக அமைந்து உள்ளது” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரலில் வெளியாகும் அரண்மனை 4

இக்குநர் சுந்தர் சீ இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை படத்தின் நான்காம் பாகம் ஏப்ரலில் வெளியாக இருப்பதாக புதிய போஸ்டருன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'டியர்' படத்தின் 'மஜா வெட்டிங்' பாடல் வீடியோ வெளியானது

ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள 'டியர்' திரைப்படத்தின் 'மஜா வெட்டிங்' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படம் வருகின்ற ஏப்ரல் 11ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் 'ஜரகண்டி' பாடல் வெளியானது

ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தின் 'ஜரகண்டி' பாடல் வெளியானது. இந்தப் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

ப்ரித்விராஜை வாழ்த்திய சூர்யா

ப்ரித்விராஜ் நடித்துள்ள ஆடுஜீவிதம் திரைப்படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் ப்ரித்விராஜை வாழ்த்தி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.