பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 26.03.2024

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் சேஷூ உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

OruvanOruvan

டிஸ்னி ப்ளஸ் ஹொட்ஸ்டாரில் வெளியாகும் 'ஹனுமான்'

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'ஹனுமான்'. இந்தத் திரைப்படம் ஜனவரி 12ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ஏப்ரல் 5ஆம் திகதி முதல் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹொட் ஸ்டாரில் வெளியாகிறது.

OruvanOruvan

OruvanOruvan

OruvanOruvan

நாளை வெளியாகிறது 'ஜருகண்டி' பாடல்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. அரசியல் அதிரடி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இத் திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜரகண்டி' நாளை காலை வெளியாகவுள்ளது.

இன்று வெளியாகிறது 'மஜா வெட்டிங்' வீடியோ பாடல்

ஜி.வி.பிரகாஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டியர்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'மஜா வெட்டிங்' என்ற பாடலின் புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்ட நிலையில், இன்று இந்த பாடலின் முழு வீடியோ வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பிரபல பாடகர் காலமானார்

இலங்கையைச் சேர்ந்த பிரபல பாடகர் சந்திரகுமார கந்தனாராச்சி காலமானார். 76 வயதான அவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலை காலமாகியுள்ளார்.

அலாவுதீன் பூதமாக மாறிய ஜெயம் ரவி

சைரன், அகிலன் , இறைவன் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

இரு நகைச்சுவை ஜாம்பவான்கள் இணையும் புதிய திரைப்படம்

சங்கர் தயாள் இயக்கத்தில் மிகப்பெரிய நகைச்சுவை ஜாம்பவான்களான செந்தில், மற்றும் யோகிபாபு இணைந்து நடிக்கும் திரைப்படம் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' . இப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

வெப்பம் குளிர் மழை படத்தின் ஸ்நீக் பீக் வெளியீடு

எம்.எஸ் பாஸ்கர் மிகவும் நகைச்சுவையாக நடித்திருக்கும் வெப்பம் குளிர் மழை படத்தின் முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.