'ரோமியோ' திரைப்பட ட்ரெய்லர்: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 25.03.2024

'ரோமியோ' திரைப்பட ட்ரெய்லர்

விஜய் ஆன்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'ரோமியோ' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஸ்ருதி ஹாசனின் 'இனிமேல்' ஆல்பம் பாடல் சற்றுமுன்னர் வெளியானது

'இனிமேல்' முழு ஆல்பம் பாடல் வெளியாகி இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது.

1.8 கோடி பார்வைகளைக் கடந்த 'கங்குவா' டீசர்

சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'கங்குவா'. இப் படத்தின் டீசர் கடந்த மார்ச் 19ஆம் திகதி வெளியானது. இந்த டீசர் வெளியாகி 1.8 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

OruvanOruvan

Ganguva teaser

'Love Me If You Dare' ஏப்ரல் 25ஆம் திகதி ரிலீஸ்

அறிமுக இயக்குநரான அருண் பீமவரபு இயக்கத்தில் நடிகர் ஆஷிஷ் ரெட்டி நடித்துள்ள ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படம் 'லவ் மீ - இப் யூ டேர்'. இந்தத் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 25ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

OruvanOruvan

love me if you dare

'டியர்' திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'டியர்'. பேமிலி எண்டர்டெயினாக உருவாகும் இத் திரைப்படம் ஏப்ரல் 11ஆம் திகதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

OruvanOruvan

Dear movie

மறைந்த கேப்டன் குறித்து உருக்கமான பதிவை பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ்

சிவகார்த்திகேயன் நடிக்கும் Sk23 திரைப்படத்தை இயக்குகிறார் ஏ.ஆர். முருகதாஸ். இந்நிலையில், மறைந்த நடிகர் விஜய்காந்த் நடித்த ரமணா திரைப்பட படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் தற்போது Sk23 இன் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.

இன்று மாலை வெளியாகிறது 'இனிமேல்' இசை ஆல்பம்

ஸ்ருதிஹாசன் இசையில் கமல்ஹாசனின் வரிகளில் லோகேஷ் நடித்துள்ள 'இனிமேல்' இசை ஆல்பம் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் 171 டைட்டில் டீசர் குறித்து வெளியான தகவல்

தலைவர் 171 படத்தின் டீசர் ஏப்ரல் 14ஆம் திகதி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ரஜினி ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

'படிக்காத பக்கங்கள்' டீசர் வெளியாகியுள்ளது

செல்வம் மாதப்பன் இயக்கத்தில், எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் தயாரிப்பில், பிக்பொஸ் புகழ் யாஷிகா ஆனந்த் நடித்துள்ள திரைப்படம் 'படிக்காத பக்கங்கள்'. இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.