'The proof' திரைப்படத்தில் கலக்கும் தன்ஷிகா: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 24.03.2024

'The proof' திரைப்படத்தில் கலக்கும் தன்ஷிகா

இயக்குநர் ராதிகா மாஸ்டர் இயக்கத்தில் சாய் தன்ஷிகா நடித்துள்ள திரைப்படம் தி புரூப் (The proof). ஆக்ஷ்ன் திரைப்படமாக உருவாகும் இப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

OruvanOruvan

Proof movie

'ஜீனி' திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள ஜீனி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

'படே மியன் சோட்டே மியன்' மார்ச் 26 வெளியாகிறது!

அலி அப்பாஸ் ஸாஃபர் இயக்கி அக்ஷ்ய் குமார், பிருத்விராஜ் சுகுமாறன், சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படே மியன் சோட்டே மியன் திரைப்படம் வருகின்ற மார்ச் 26ஆம் திகதி வெளியாகும் என்பதை படக்குழு தெரிவித்துள்ளது.

OruvanOruvan

Padey miyon sotey miyon

இன்று வெளியாகிறது ஜெயம் ரவியின் 'ஜீனி' திரைப்பட ஃபர்ஸ்ட் லுக்

அறிமுக இயக்குநர் புவனேஸ் அர்ஜூன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் திரைப்படம் ஜீனி. ஃபேண்டசி கதைக்களத்தடன் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அதிக பொருட்செலவில் உருவாகும் இத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

OruvanOruvan

Genie movie first look

'வருஷங்களுக்கு சேஷம்' திரைப்பட ட்ரெய்லர் வெளியானது

வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'வருஷங்களுக்கு சேஷம்'. 80களில் நடப்பதைப் போல இத் திரைப்படத்தின் கதை அமைந்துள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஆனந்தியின் 'ஒயிட் ரோஸ்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

அறிமுக இயக்குநரான ராஜசேகர் இயக்கத்தில் ஆனந்தி நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'. சமீபத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது இதன் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் ஏப்ரல் 5ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'இங்க நான்தான் கிங்கு' திரைப்பட பாடல் வெளியானது!

ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடித்துவரும் புதிய திரைப்படம் 'இங்க நான்தான் கிங்கு'. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான 'மாயோனே' என்ற பாடலின் வரிகளை உள்ளடக்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.