பேரழகில் ஜொலிக்கும் ஈழத்து ஜனனி: இன்றைய சினிமா

OruvanOruvan

23.03.2024 Cinema News

பேரழகில் ஜொலிக்கும் ஈழத்து ஜனனி

ஈழத்து பெண் ஜனனி தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

பூஜையுடன் துவங்கிய ராம்சரணின் அடுத்த படம்

ராம்சரண் மற்றும் ஜான்வி கப்பூர் இணைந்து நடிக்கும் ராம்சரண் 16 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

சூது கவ்வும் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியானது

சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர் எம். எஸ் அர்ஜூன் இயக்கும், இப்படத்தில் நடிகர் மிர்சி சிவா, கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

ஜி. வி பிரகாஷின் 'கள்வன்' டிரெயிலர் வெளியானது

ஜி. வி பிரகாஷ் நடிப்பில் பி .வி ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் கள்வன். பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. ஏப்ரல் 4ஆம் திகதி படம் திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இறுதியாக கேரள ரசிகர்களை சந்தித்த விஜய்

தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மீண்டும் சென்னைக்கு புறப்படவுள்ளார். இதனால் இறுதியாக கேரளா ரசிகர்களை சந்தித்து தனக்கு கொடுத்த அன்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதன்போது, ரசிகர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு நன்றி கூறியுள்ளார்.