25 வருடங்களுக்குப் பின் நடனப்புயல் - இசைப்புயல் இணையும் திரைப்படம்: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 22.03.2024

25 வருடங்களுக்குப் பின் நடனப்புயல் - இசைப்புயல் இணையும் திரைப்படம்

மனோஜ் என்.எஸ் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ஜென்டில்மேன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, காதலன், மின்சார கனவு ஆகிய 5 திரைப்படங்களின் பின்னர், சுமார் 25 வருடங்களுக்குப் பின் இந்த கூட்டணி இணைகிறது.

OruvanOruvan

Ar rahman and prabhu deva

'சூது கவ்வும் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

எம்.எஸ். அர்ஜூன் இயக்கத்தில் 'சூது கவ்வும் 2' திரைப்படம் உருவாகிறது. இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. இப்போது 'சூது கவ்வும் 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

'தக் லைப்' திரைப்படத்தில் 3 வேடங்களில் நடிக்கும் கமல்!

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துவரும் புதிய திரைப்படம் தக் லைப். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கிய நிலையில், தற்போது செர்பியாவில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் கமல் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

OruvanOruvan

Thug life movie

பிக்பொஸ் ஷாரிக் நடிக்கும் புதிய திரைப்படம்

நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'நேற்று இந்த நேரம்'. த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் பிக்பொஸ் போட்டியாளர் ஷாரிக் கதாநாயகனாக நடித்துள்ளார். வருகின்ற மார்ச் 29ஆம் திகதி உலகமெங்கிலும் இந்தத் திரைப்படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

netru indha neram movie

ரொமான்ஸில் கலக்கும் லோகேஷ் - ஸ்ருதி

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள 'இனிமேல்' ஆல்பம் பாடல் வருகின்ற 25ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் அதற்கான டீஸர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

கேப்டன் மகனின் திரைப்படத்தை இயக்கும் பொன்ராம்!

இயக்குநர் பொன்ராம், கேப்டன் விஜய்காந்த்தின் மகனான சண்முகபாண்டியனை வைத்து திரைப்படமொன்றை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தத் திரைப்படம் குறித்த முதல்கட்ட பேச்சுவாரத்தைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

OruvanOruvan

shanmuga pandi and ponram