'இளையராஜா' படத்துக்கு திரைக்கதை எழுதும் கமல்!: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 21.03.2024

'இளையராஜா' படத்துக்கு திரைக்கதை எழுதும் கமல்!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுவதும் அதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார் என்பதும் நம் அனைவருக்கும். தெரியும். இந்த நிலையில் இப் படத்துக்கு திரைக்கதை எழுதுகிறார் நடிகர் கமல்ஹாசன். நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கமல் இதனை தெரிவித்துள்ளார்.

பிரேமலு திரைப்படத்தை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

தமிழில் வெளியான பிரேமலு திரைப்படத்தை வாழ்த்தி,நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'அழகான பொழுதுபோக்கு நிறைந்த படத்தை கொடுத்ததற்காக பிரேமலு படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

OruvanOruvan

Sivakarthikeyan post

மணக்க மணக்க பிரியாணி செய்து அசத்திய அஜித்

பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்றிருக்கும் அஜித், சக இயக்குநர்களுக்கு பைக் ஓட்ட கற்றுக்கொடுத்தது, ஸ்னூக்கர் விளையாடியது என சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருந்தார். இந்நிலையில் தற்போது தன்னுடன் வந்த இயக்குநர்களுக்கு தனது கையால் மணக்க மணக்க பிரியாணி செய்து கொடுத்துள்ளார்.

'சுழல்' வெப் தொடரின் இரண்டாம் பாகம் இந்த வருடம் வெளியாகும்

கதிர், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் அமேசானில் வெளியானது, சுழல் வெப் சீரிஸ். இது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த நிலையில், தற்போது சுழல் இரண்டாம் சீஸன் இந்த வருடம் வெளியாகும் என அமேசான் ஓடிடி தளம் அறிவித்துள்ளது.

OruvanOruvan

Suzhal 2

உலகளவில் ட்ரெண்டாகும் கேப்டன் மில்லர்!

தனுஷ் நடிப்பில் கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி அமேசன் பிரைம் தளத்தில் வெளியானது கேப்டன் மில்லர் திரைப்படம். இந்தத் திரைப்படம 40 நாட்களைக் கடந்தும் உலகளவில் 9க்கும் அதிகமான நாடுகளில் டொப் 5 வரிசையில் இடம்பிடித்து, ட்ரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது.

OruvanOruvan

Captain miller

மாலை வெளியாகும் இனிமேல் ஆல்பத்தின் டீசர்

ஸ்ருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் இனிமேல் ஆல்பத்தின் டீசர் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியாகவுள்ளது.கேரளா ரசிகர்களுக்காக மலையாளத்தில் பேசி அசத்திய விஜய்

'கோட்' திரைப்பட படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள விஜய், அங்கு பஸ் மீது ஏறி நின்று, ரசிகர்களுடன் மலையாளத்தில் பேசியுள்ளார். குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

'வெப்பம் குளிர் மழை' ட்ரைலர் வெளியாகியுள்ளது

அறிமுக இயக்குநர் பாஸ்கல் இயக்கத்தில் திரவ், இஸ்மத் பானு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெப்பம் குளிர் மழை'. அண்மையில் இத் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.