அனுஷ்கா - விக்ரம் பிரபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்: இன்றைய சினிமா
அனுஷ்கா - விக்ரம் பிரபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மெண்ட்ஸ், யுவி கிரியேஷன்ஸ் இணைந்த தயாரிப்பில் அனுஷ்கா நடிக்கும் புதிய திரைப்படம் 'காதி'. இப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
ரீ ரிலீஸாகும் அழகி...வாழ்த்திய யுவன்
அழகி திரைப்படம் வருகின்ற மார்ச் 29ஆம் திகதி ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா படத்தின் மேம்படுத்தப்பட்ட டிரைலரை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது எக்ஸ் தளத்தில், 'சில காதல் கதைகள் காலம் கடந்து நிற்கும். அழகி படத்தின் டிரைலரை வெளியிடுவதில் மகிழ்ச்சி. மார்ச் 29ஆம் திகதி மறுவெளியீடாகிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்!' என பதிவிட்டுள்ளார்.
'இளையராஜா பயோபிக்' முதல் போஸ்டர்!
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார் தனுஷ்.
ஹிந்தித் திரைப்படத்தில் இணையும் ஆமீர்கான் - ஜெனிலியா
பிஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் நடிகர் ஆமீர்கான் மற்றும் ஜெனிலியா இணைந்து நடிக்கும் ஹிந்தித் திரைப்படம் 'சிதாரே ஜமீன் பர்'. இந்தத் திரைப்படம் இந்த வருடம் கிறிஸ்மஸ்க்கு வெளிவரும். மேலும் படப்பிடிப்பில் நடிகர் ஆமீர்கான் மற்றும் ஜெனிலியா இருவரும் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பைக் ரைடர்களுடன் பட்டடையை கிளப்பும் தல!
தென்னிந்திய சினிமாவில் “தல” என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படுபவரே அஜித்குமார். சினிமாவை தாண்டி பைக் பிரியரான தல ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் தனது பைக் டூர் பயணத்தை மீண்டும் தொடங்கியது போன்றும், பைக் ரைடர்களுடன் கலகலப்பாக பேசி அட்வைஸ் செய்வதும் போன்ற காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கங்குவா டீசர்!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியது. இந்நிலையில் இந்த டீசரானது யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விஜய்!
'கோட்' திரைப்பட படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள விஜய்க்கு அங்குள்ள மக்கள் பலத்த வரவேற்பளித்துள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் கூடினர். இதைப் பார்த்த விஜய் படப்பிடிப்பு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றின் மீது ஏறி, ரசிகர்களைப் பார்த்து கையசைத்து, அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
இளையராஜா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் தனுஷ்!
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்க வேண்டும் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்க்கு மட்டுமல்ல வெங்கட் பிரபுவுக்கும் அமோக வரவேற்பு - பாரபட்சம் காட்டாத இரசிகர்கள்
நடிகர் விஜய்யின் "The Greatest of All Time" படத்தின் சூட்டிங் தற்போது கேரளாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக திருவனந்தபுரம் சென்ற விஜய்க்கு இரசிகர்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்றைய தினம் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோர் திருவனந்தபுரம் சென்றடைந்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.