'கங்குவா' திரைப்பட டீசர் வெளியானது!: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 19.03.2024

சூர்யாவின் 'கங்குவா' திரைப்பட டீசர் வெளியானது!

ரசிகர்களை கிறங்கடிக்கும் கிளாமரில் சமந்தா

ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள வருண் சிட்டாடல் ஹனி பன்னி ( CitadelHoneyBunny) தொடரின் பெஷ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வருண் தவானுடன் முதல்முறையாக சமந்தா ரூத் பிரபு ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிகழ்வில் கறுப்பு நிற ஆடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் சமந்தா கியூட்டாக பங்கேற்றுள்ளார்.

'வெப்பம் குளிர் மழை' திரைப்பட பாடல் வெளியானது!

அறிமுக இயக்குநர் பாஸ்கல் இயக்கத்தில் திரவ் மற்றும் இஸ்மத் பானு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் வெப்பம் குளிர் மழை.

இந்தத் திரைப்படத்தின் 'டமக்கு டமக்கா' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகராக அறிமுகமாகும் லோகேஷ்

‘விக்ரம்’ படத்துக்குப் பின்னர் லோகேஷ் கனகராஜுடன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் 'இனிமேல்' என்ற தலைப்பில் ஒரு சுயாதீன பாடலை அறிவித்தது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகிறார். இந்த பாடல் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளதுடன் ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார்.

மாஸ் காட்டும் ஆர்யா!

மனு ஆனந்த் இயக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படத்தில் நடிகர் ஆர்யா நடிக்கிறார். இந்தத் திரைப்படம் ஆக்ஷ்ன் த்ரில்லர் கதையாக உருவாகிறது. இந்தத் திரைப்படத்துக்காக ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார் ஆர்யா. இந்நிலையில் அவர் உடல் பருமனாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தையும் தற்போது எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

கங்குவா திரைப்படத்தின் புதிய போஸ்டர்!

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 3டி முறையில் சரித்திர திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இந்தத் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 4.30மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தின் புதிய போஸ்டரை நடிகர் சூர்யா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

'ஒரு கோழி முட்டை' பாடல் வெளியானது!

பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கள்வன். இந்தத் திரைப்படம் வருகின்றன ஏப்ரல் 4ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இத் திரைப்படத்தின் 'ஒரு கோழி முட்டை' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

'ரெபெல்' திரைப்படத்தின் பாடல் வெளியானது!

நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ரெபெல். வருகின்ற 22ஆம் திகதி திரையரங்கில் வெளியாகவுள்ள இத் திரைப்படத்தின் 'அழகான சதிகாரி' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.