பறக்கும் தீப்பொறி...ஓடும் குருதி ஆறு...: எதிர்பார்ப்பை எகிறவிட்ட கங்குவா திரைப்பட டீசர்

OruvanOruvan

Ganguva movie teaser

இயக்குநர் சிவா இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன், யுவி கிரியேஷன் இணைந்த தயாரிப்பில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா.

இந்தத் திரைப்படத்தில் பொலிவுட் நடிகையான திஷா பதானி, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் என பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், 3டி முறையில் சரித்திர படமாக உருவாகிறது இந்தத் திரைப்படம்.

10 மொழிகளில் வெளியாகவுள்ள கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவ்வப்போது படம் குறித்த அப்டேட்டுக்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது படக்குழு.

இந்நிலையில் அனைவரினதும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று கங்குவா திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது.

திரைப்படத்தின் ரிலீஸ் திகதி குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.