உயிருக்கு போராடும் பிரபல நடிகை: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 18.03.2024

உயிருக்கு போராடும் பிரபல நடிகை

தமிழ் திரைப்படங்களான சைத்தான், கன்னி ராசி, ஆயிரம் பொற்காசுகள் உள்ளிட்ட படங்களில் நடித்த அருந்ததி நாயர் தற்போது உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவனந்தபுரத்தை சேர்ந்த அருந்ததி நாயர் தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்துக்குள்ளாகியுள்ளார். தற்போது அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

OruvanOruvan

கேக் வெட்டி திருமண நாளைக் கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி!

அமர்க்களம் திரைப்படத்தில் இணைந்து நடித்து, நிஜ வாழ்விலும் ஜோடியானவர்கள் அஜித் ஷாலினி. இந்நிலையில் தற்போது அஜித் - ஷாலினிக்கு திருமணமாகி 25 வருடங்கள் நிறைவடைவதையொட்டி, சென்னையிலுள்ள ரெசார்ட்டில் கேக் வெட்டி, நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து வழங்கியுள்ளனர்.

தொடர்ந்து 8 மணிநேரம் டப்பிங் பேசிய கவுண்டமணி!

நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமணி, தற்போது 'ஒத்த ஓட்டு முத்தையா' எனும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் பரணி டப்பிங் ஸ்டூடியோவில் தொடர்ந்து 8 மணி நேரம் உற்சாகமாக டப்பிங் பேசியுள்ளார் கவுண்டமணி.

OruvanOruvan

Goundamani 8 hours dubbing

சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்பட டீசர் வெளியாகும் திகதி அறிவிப்பு

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் டீசர் நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்

OruvanOruvan

திருமண பந்தத்தில் இணைந்தார் மீதா!

குட் நைட் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மீதா ரகுநாத். இந்நிலையில், நேற்று இரு வீட்டார் முன்னிலையில் மீதாவின் திருமணம் நடந்துள்ளது. தனது திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

OruvanOruvan

Meetha wedding

'பேமிலி ஸ்டார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடித்துள்ள பேமிலி ஸ்டார் திரைப்படம், வருகின்ற ஏப்ரல் 05ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - வெளியீட்டு திகதியை அறிவித்த படக்குழு

சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் 22ம் திகதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டருடன் அறிவித்துள்ளது.