முடிவுக்கு வந்த பப்லுவின் லிவிங் டூ கெதர் வாழ்க்கை: மனம் திறந்த ஷீத்தல்
நடிகர் பப்லு பிருத்விராஜை காதலியான ஷீத்தல் பிரிந்து விட்டதான தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பப்லு பிருத்விராஜ் விவாகரத்தான நிலையில், ஓட்டிஸம் குறைபாடு கொண்ட மகனுடன் வாழ்ந்து வருகின்றார்.
மனைவி பீனாவை பிரிந்த பிறகு ஷீத்தல் என்பவருடன் பப்லு லிவிங் டூ கெதரில் இருந்தார்.
ஆனால், அந்த உறவு முறிந்து விட்டதாக கூறப்பட்டது.
இருந்தாலும் அதுகுறித்து எந்த விளக்கமும் பிருத்விராஜோ, ஷீத்தலும் கூறாமல் இருந்தனர்.
முடிவுக்கு வந்த லிவிங் டூ கெதர் வாழ்க்கை
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஷீத்தல் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனது கடந்த கால வாழ்க்கையை பற்றி பலரும் என்னிடம் கேள்விகள் கேட்கிறார்கள்.
அவர்கள் என் சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் நடந்தவற்றை தெரிந்துகொள்ளாமல் தப்பு தப்பாக புரிந்திருக்கிறார்கள்.
பப்லுவும் நானும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் லிவின் ரிலேஷன்ஷிப்பில்தான் இருந்தோம்.
எங்களது உறவு நாங்கள் நினைத்தபடி இருக்கவில்லை. அதனால் இருவரும் இப்போது பிரிந்திருக்கிறோம். இரண்டு பேரும் சேர்ந்திருந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
ஆனால் இது இரண்டு பேரும் பிரிவதற்கான நேரம். எங்களின் இந்த முடிவை அனைவரும் மதித்து எங்களுக்கான நேரத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகின்றது.