விஜய் ஆண்டனியின் சர்ச்சை பேச்சு!: அவரே கொடுத்த விளக்கம்

OruvanOruvan

Actor vijay antony

நடிகர் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'ரோமியோ' திரைப்படம் வருகின்ற ரமழான் பண்டிகையன்று வெளியாகவுள்ள நிலையில், இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துள்ளது.

முன்னதாக படத்தில் கதாநாயகி மது அருந்துவது போல் போஸ்டர் வெளியாகியிருந்தது.

அதுகுறித்து, விஜய் ஆண்டனி பதிலளிக்கும்போது, “ஆண், பெண் என யார் குடித்தாலும் தவறுதான். நம் நாட்டில் நீண்ட காலமாகவே குடி உள்ளது. திராட்சை ரசம் என்ற பெயரில் ஜீசஸ் கூட குடித்துள்ளார்” என கூறியிருந்தார்.

இவரின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளத்தில் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.