இயக்குநர் சேரனின் முன்னாள் காதலியை நினைவுப்படுத்திய பார்த்திபன்!: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 17.03.2024

பார்த்தீபனின் கேள்விக்கு பதிலளித்த சேரன்!

அண்மையில் இயக்குநர் பார்த்திபன், தனது எக்ஸ் தளத்தில் 'இழந்த காதலி, காதலனை திருமணத்துக்கு பின்பு நீங்கள் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் பேச நினைப்பது? நினைப்பதை அனுப்புங்கள்...மீண்டும் நாளை பேசுகிறேன்' என பதிவிட்டிருந்தார்.

இதற்கு இயக்குநரும் நடிகருமான சேரன் அருமையான ஒரு பதிலை பதிவிட்டிருந்தார்.

ரீ ரிலீஸாகும் அழகிய தமிழ் மகன்!

கடந்த 2002ஆம் ஆண்டு விஜய், ஸ்ரேயா நடிப்பில் வெளியான திரைப்படம் 'அழகிய தமிழ் மகன்'. இந்நிலையில், வருகின்ற 22ஆம் திகதி 'அழகிய தமிழ் மகன்' திரைப்படம் ரீ ரிலீஸாகவுள்ளது.

OruvanOruvan

Alagiya tamil magan

பாஜகவில் இணைந்த பிரபல பின்னணிப் பாடகி

பிரபல பின்னணிப் பாடகியான அனுராதா பட்வால், பாஜகவில் இணைந்துள்ளார். இந்தி திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியாக வலம் வருபவர் அனுராதா பட்வால். ஆயிரக்கணக்கான இந்திப் பாடல்களை பாடியுள்ளார். இது மட்டுமல்லாமல் மராத்தி, ஒரியா, பெங்காலி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இவர் பாடியுள்ளார்.

OruvanOruvan

ரீ ரிலீஸாகும் 'அழகி'

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு பார்த்தீபன், தேவயானி, நந்திதா தாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் அழகி. முதல் காதலைக் கொண்டாடும் திரைப்படமாக இது அமைந்த நிலையில் 22 வருடங்கள் கடந்து மார்ச் 29ஆம் திகதியன்று புதிய தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸாகவுள்ளது 'அழகி' திரைப்படம்.

'துப்பறிவாளன் 2' அப்டேட்

'துப்பறிவாளன் 2' திரைப்படத்தை தானே இயக்குவதாக நடிகர் விஷால் அறிவித்திருந்த நிலையில், தற்போது துப்பறிவாளன் 2 திரைப்படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில்,“உண்மைகள் வார்த்தைகள் வரவில்லை. 25 வருட கனவு இன்று நனவாகிறது. எனது அப்பாவுக்கும் அர்ஜூன் சாருக்கும் நன்றி. உங்கள் பெயரை காப்பாற்றும் படி துப்பறிவாளன் 2 படத்தை நல்லபடியாக கொண்டு வருவேன் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

'கிஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் சரவணன் மீனாட்சி புகழ் கவின் நடிக்கும் திரைப்படம் தான் 'கிஸ்'. அனிருத் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நேற்று இடம்பெற்றது.

இந்த பாடல் படப்பிடிப்பில் நடிகர் பிரபு, கவின், சதீஷ் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

OruvanOruvan

kiss movie