புரோமசன் பணிகளில் தீவிரம் காட்டும் ஆடுஜீவிதம் படக்குழு: இன்றைய சினிமா
புரோமசன் பணிகளை ஆரம்பித்த ஆடு ஜீவிதம் படக்குழு
மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய 'ஆடு ஜீவிதம்'என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம். இபப்படத்தின் பணிகள் தற்போது நிறைவடைந்துவரும் நிலையில் படக்குழுவினர் கதையின் நாயகனான பிரித்விராஜ்ஜை வைத்து புரோமசன் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
தனுஷின் ஆஸ்தான நாயகியாகும் பிரியங்கா மோகன்
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் ‘கேப்டன் மில்லர்’ கதாநாயகி பிரியங்கா மோகன் மீண்டும் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில், இப்படத்தின் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து பிரியங்கா மோகன் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.இப்பாடல் படத்தின் புரமோஷனுக்காக பயன்படுத்தப்படுகிறது. இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் வருண் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பூரண குணமடைந்து வீடு திரும்பிய பாலிவுட் ஜாம்பவான்
பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் உடல் நலம் பாதிகக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் பூரண குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளதாக பாலிவுட் தரப்பினர் தெரிவித்துள்ளளனர்.
ஆடு ஜீவிதம் படத்தின் டப்பிங் நிறைவு
மலையாள நடிகர் பிரித்விராஜ், நடித்துள்ள ஆடு ஜீவிதம் திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் பிருத்விராஜ், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி டப்பிங்கை நிறைவுசெய்துள்ளதாக சூப்பரான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.