கஜானா திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியானது: இன்றைய சினிமா
கஜானா திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
மாரடைப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர்
நகைச்சுவை நடிகர் சேஷூ மாரடைப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் "லொள்ளு சபா" நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.
ஜப்பானில் வெளியாகவுள்ள ஆர்.ஆர்.ஆர்!
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் நடிப்பில் வெளியாகிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.
இந்நிலையில் இந்தத் திரைப்படம் வருகின்ற 18ஆம் திகதி ஜப்பானில் வெளியாகிறது. இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகியமை குறிப்பிடத்தக்கது.
இன்று வெளியாகிறது பிரேமலு!
கிரிஷ் இயக்கத்தில் கடந்த மாதம் 09ஆம் திகதி மலையாளத்தில் வெளியான திரைப்படம் பிரேமலு.
இத் திரைப்படம் இன்று தமிழிலும் வெளியாகவுள்ளது.
ஜி.வி.பிரகாஷின் புதிய திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு!
பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கள்வன்.
இந்தத் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 04ஆம் திகதி வெளியாகும் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.
மீண்டும் இணைந்த லோகேஷ் - கமல் கூட்டணி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ராஜ்கமல் நிறுவனத்துடன் இனிமல் என்ற மியூசிக் ஆல்பத்தில் இணைந்துள்ளார். "இனிமேல்" என்கின்ற அந்த மியூசிக் ஆல்பத்திற்கு கமல்ஹாசன் பாடல்களை எழுதியுள்ளார். இந்த பாடலை ஸ்ருதிஹாசன் கம்போஸ் செய்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வெளியானது ஏகே 63 டைட்டில்
நடிகர் அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் இணையவிருக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்துக்கு என்று குட் பேட் அக்லி பெயர் வைக்கப்பட்டுள்ளது.