மூன்று கான்களும் இணையும் திரைப்படம்!: மெகா அப்டேட்

OruvanOruvan

Three khans in one movie

சினிமா வட்டாரத்தில் ஷாருக்கான், சல்மான்கான், ஆமீர்கான் மூவருமே மிகப்பெரும் ஸ்டார் நடிகர்கள்.

அந்த வகையில், இவர்கள் மூவரும் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் குறித்து ஆமீர்கான் ஒரு அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.

ரசிகர் ஒருவர் இதுகுறித்து கேட்ட கேள்விக்கு, “நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து படம் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இதுகுறித்து நாங்கள் மூவரும் முன்பே பேசியிருக்கிறோம்.

அதற்கான ஒரு நல்ல கதை கிடைக்கும். என்று நம்புகிறேன். இதுதான் அதற்கான சரியான நேரம்” எனக் கூறியிருக்கிறார்.

இவர்கள் மூவரும் சமீபத்தில் நடந்த ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடியமை குறிப்பிடத்தக்கது.