'தெய்வீக இருப்பு என் ஸ்டூடியோவுக்கு வந்தது' நெகிழ்ச்சியில் தேவி ஸ்ரீ பிரசாத்!: இன்றைய சினிமா அப்டேட்ஸ்...

OruvanOruvan

Today cinema updates 13.03.2024

மகிழ்ச்சியை பகிர்ந்த தேவி ஸ்ரீ பிரசாத்!

முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தற்போது புஷ்பா பாகம் 2 போன்ற தெலுங்கு திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டூடியோவுக்கு இளையராஜா சென்றுள்ளார்.

இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத்.

நீலி கதாபாத்திரத்தில் அனுஷ்கா!

ரெஜின் தோமஸ் இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் புதிய திரைப்படம் கத்தனார் - தி வைல்ட் சார்சரர்.

9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ பாதிரியாரான கடமத்ததது கத்தனார் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தியதாக இந்தத் திரைப்படம் அமைந்துள்ளது.

இதில் கள்ளியன்காட்டு நீலி என்ற வேடத்தில் பேயாக மிரட்ட வருகிறார் நடிகை அனுஷ்கா.

OruvanOruvan

Anushka new movie

'தக் லைஃப்' படப்பிடிப்புக்கு செல்லாத கமல்!

'தக் லைஃப்' திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சேர்பியாவில் நடத்த தீர்மானித்துள்ள நிலையில், நடிகர் கமலால் அந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல் போயுள்ளது.

ஓய்வுக்காக அமெரிக்கா சென்ற கமல், பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தைக்காக சென்னை திரும்ப வேண்டியிருந்ததால் அவரால் சேர்பியாவில் நடக்கவிருந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை.

OruvanOruvan

Thug life

திருமண பந்தத்தில் இணைந்தார் மீரா சோப்ரா!

2005ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மீரா சோப்ரா.

40 வயதாகும் அவர் தனது நீண்ட நாள் காதலரான ரக்ஷித் கெஜ்ரிவாலை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

OruvanOruvan

Meera chopra wedding photos

OruvanOruvan

Meera chopra wedding photos

OruvanOruvan

Meera chopra wedding photos

யாஷிகா ஆனந்த்தின் போட்டோஷூட் புகைப்படங்கள்!

நடிகை யாஷிகா ஆனந்த் ரெட் கலர் ட்ரெஸ்ஸில் போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்த வைரலாகி வருகிறது.

OruvanOruvan

Yashika photoshoot

'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற அடல்ட் படத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இப்படத்தின் மூலம் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார் யாஷிகா. பின்னர் 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியின் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.