வதந்திகளுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்....: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை டாப்சி

OruvanOruvan

Taapsee wedding roomers

ஆடுகளம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் நடிகை டாப்ஸி.

தொடர்ந்தும் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் நடிகை டாப்சியும் பேட்மிண்டன் வீரருமான மத்தியாஸ் போவும் பல காலமாக காதலித்து வருகின்றனர்.

இந்த மாதம் உதய்பூரில் இருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் பரவியது.

OruvanOruvan

Taapsee wedding roomers

தனது திருமணம் பற்றிய சர்ச்சைகளுக்கு நடிகை டாப்சி விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், “எனது திருமணம் குறித்து தகுந்த நேரத்தில் நானே அறிவிப்பேன். ரசிகர்களிடம் சொல்லாமல் எதையும் செய்ய மாட்டேன்.

10 வருடங்களாக நானும் மத்தியாசும் காதலிக்கிறோம். திருமணம் குறித்து வெளியாகும் அனைத்து வதந்திகளுக்கும் நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், நாங்கள் அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

காதலிக்கும்போது இருந்ததை விட இப்போதுதான் அவர் எனக்கு ஏற்றவராக இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.