ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ள 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம்!: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 12.03.2024

ஓடிடி தளத்தில் வடக்குப்பட்டி ராமசாமி!

இயக்குநர் கார்த்தி யோகி இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் பெப்ரவரி 02ஆம் திகதி வெளியானது.

இந்நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது.

புதிய கூட்டணி அமைக்கும் சல்மான் - முருகதாஸ்

சல்மான் கானுடன் புராணக் கதை அம்சம் கொண்ட திரைப்படத்தில் கைகோர்க்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தத் திரைப்படம் வருகின்ற 2025 ரம்ழானுக்கு திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

OruvanOruvan

new movie

ட்ரெய்லர் வெளியானது!

நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ரெபெல்' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

'ரணம்' வெற்றிக் கொண்டாட்டம்!

நடிகர் வைபவின் 25ஆவது திரைப்படமான 'ரணம்' கடந்த மாதம் வெளியாகியது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

OruvanOruvan

Ranam movie

1 கோடி ரூபாய் நிதியளித்த விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி உதவியுள்ளார்.

இது தொர்பாக, தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடர ஏதுவாக நடிகர் விஜய், அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம், மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது' என்று அறிவித்துள்ளது.

OruvanOruvan

1 crore donation