நடிகர் சூர்யா கிரண் காலமானார்: இன்றைய சினிமா

OruvanOruvan

Today Cinema 11.03.2024

நடிகர் சூர்யா கிரண் காலமானார்

ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன், மெளனகீதங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சூர்யா கிரண்(49) சென்னையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதாவின் அண்ணன் ஆவார்.

'தளபதி 69'

விஜய்யின் 69ஆவது படத்தின் இயக்குநர் யார் என்ற தேடலில் பெரும் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது ஒருவழியாக எச்.வினோத் தான் 'தளபதி 69'இன் இயக்குநர் என்ற தகவல் கசிந்துள்ளது.

அதிகாரப்பூர்வ தகவல் சில நாட்களில் வௌயிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

OruvanOruvan

H.Vinoth

இன்று வெளியாகிறது ரெபேல் ட்ரெய்லர்!

அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரெபெல். இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லரை இன்று மாலை 5 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.