சிகிச்சை நிறைவு ; மாலை வீடு திரும்புகிறார் அஜித்: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 08.03.2024

சிகிச்சை நிறைவு ; மாலை வீடு திரும்புகிறார் அஜித்

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் அஜித் இன்று மாலை வீடு திரும்புவார் என்று அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

'ஒடேலா 2' பர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமன்னா நடித்துள்ள 'ஒடேலா 2' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கௌரவ டாக்கடர் பட்டம்

திருப்பதி ஸ்ரீபத்மாவதி மகளிர் பல்கலைக்கழக 21வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றதுடன், அதில் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசிர் வழங்கினார்.

பூஜையுடன் தொடங்கிய 'ரிலீஸ்' திரைப்படம்!

இயக்குநர் சுந்தரபாண்டி இயக்கத்தில் பிக்பொஸ் வெற்றியாளர் ஆரி அர்ஜூன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பமானது.

இந்தத் திரைப்படத்துக்கு 'ரிலீஸ்' என தலைப்பிடப்பட்டு த்ரில்லர் பாணியில் கதையம்சம் அமைந்துள்ளது.

OruvanOruvan

Aari new movie

பழம்பெரும் நடிகை ரம்யா காலமானார்

சிங்கள பழம்பெரும் நடிகை ரம்யா வணிகசேகர தனது 73 வது வயதில் காலமானார். இவர் பத்திரிகையாளராகவும், வானொலி செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

OruvanOruvan

old actress passes away

'D51' டைட்டில் இன்று வெளியாகிறது

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷின் 51ஆவது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியிடப்படவுள்ளது.

இந்தத் திரைப்படம் அதிரடி சண்டையை மையப்படுத்தியதாக தயராகிறது.

OruvanOruvan

D51title