பொது இடத்தில் காஜல் அகர்வால் மீது அத்துமீறிய ரசிகர்: சர்ச்சையை கிளப்பிய வீடியோ

OruvanOruvan

Actress Kajal Agarwal

கடை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஜல் அகர்வாலிடம் பொது இடம் என்று கூட பார்க்காமல் ரசிகர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்ட காணொளிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

குழந்தை பிறப்பிற்கு பிறகு படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் ஹைதராபாத்தில் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது, ரசிகர் ஒருவர் காஜல் அகர்வாலின் இடுப்பை பிடித்து செல்பி எடுக்க முயன்றார்.

இதனால், கடுப்பான காஜல், என்ன இது என்று கேட்க.. உடனே அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

முகம் சுளிக்க வைக்கும் இந்த காணொளிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகை என்றால் அத்துமீறலாமா என்று அந்த ரசிகரை கண்டபடி திட்டி வருகின்றனர்.

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் 2008ம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

ஆனால், அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, தெலுங்கு பக்கம் சென்ற காஜல், ராம்சரணுடன் மகதீரா படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது.

அதனை தொடர்ந்து மீண்டும் தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

இவர் நடிப்பில் இந்தியன்2 வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் காஜல் அகர்வால் பங்கேற்றுள்ளார்.

அப்போது செல்பி எடுப்பதற்காக வந்த ஒருவர், அவரின் இடையில் கை வைத்துள்ளார்.

இதனால் கடுப்பான காஜல் அகர்வால் என்ன இதெல்லாம் என கோபப்பட்ட, அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.