முதல் நபராக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நடிகர் விஜய்: வெளியிட்ட அறிவிப்பு இதோ - காணொளி

OruvanOruvan

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக களமிறங்கியுள்ளார்.

சினிமாவில் பல தடைகளை உடைத்து முன்னணி நாயகனாக, பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டு சாதித்தாரோ அதேபோல் அரசியலிலும் அவரது ராஜ்ஜியம் நடக்கும் என்பது அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

தனது கட்சி பெயர் தமிழக வெற்றிக் கழகம் என அவர் அறிவித்திருந்தார். அத்துடன், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கூறினார்.

இதற்கான பணிகளை அவர் செய்து வருவதுடன், இடை இடையே கட்சி தொடர்பான சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

தற்போது கட்சியில் இணையும் உறுப்பினர்களுக்காக புதிய செயலி என்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அதோடு அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ஆளாக இணைந்துள்ளார்.

கட்சி அறிவிப்பை வெளியிட்ட விஜய் கூடவே ஒரு சோகமான செய்தியையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்திருந்தார்.

இப்போது நடிக்கும் படம் மற்றும் இன்னொரு படம் நடித்துவிட்டு மொத்தமாக அரசியலில் இறங்குவேன் என அவர் கூறியது தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.