நீதிமன்றத்தில் சரணடைந்த பிரபல நடிகை!: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 06.03.2024

நீதிமன்றத்தில் நடிகை ஜெயப்பிரதா!

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் விதியை மீறி ஒரு சாலையை திறந்த வைத்த குற்றத்துக்காக ராம்பூர் நீதிமன்றத்தில் நடிகை ஜெயப்பிரதா மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி 7 முறை சம்மன் அனுப்பியும் ஜெயப்பிரதா ஆஜராகாத காரணத்தினால், அவரை தலைமறைவான குற்றவாளியாக அறிவித்து கைது செய்து ஆஜர்படுத்தும்படி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனை ரத்து செய்யும்படி ஜெயப்பிரதா தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியாக, நீதிமன்றத்தில் சரணடைந்தார்

பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

OruvanOruvan

Actress jeyapradha

'தக் லைப்'பிலிருந்து விலகியுள்ளாரா துல்கர்!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் தக் லைப்.

இந்தத் திரைப்படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது துல்கர் சல்மான் அப் படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்வேதா மோகன் இசையமைத்து பாடிய பாடல்!

பிரபல பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் இசையமைத்து பாடியுள்ள 'பெண் ஆனந்தம்' எனும் பாடலை நடிகர் தனுஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் மகளிர் தினத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

ஹொட் ஸ்டாரில் லவ்வர்!

நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான 'லவ்வர்' திரைப்படம் வருகின்ற 8ஆம் திகதி டிஸ்னி ஹொட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

OruvanOruvan

lover