திருமண பந்தத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்!: இன்றை சினிமா

OruvanOruvan

Today cinema 29.02.2024

நகைச்சுவை நடிகர் முனிஷ்காந்த் திருமணம்!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான முனிஷ்காந்த், தேன்மொழி எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

சென்னை வடபழனி கோயிலில் சொந்த பந்தங்கள் முன்னிலையில் குறித்த திருமணம் நடந்துள்ளது.

OruvanOruvan

Comedy actor muneeshkanth marriage

பெற்றோராகும் ரன்வீர் - தீபிகா

பொலிவுட் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே தம்பதியினர் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது தீபிகா படுகோனே 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் செப்டெம்பர் மாதம் குழந்தை பிறக்கப் போவதாகவும் இன்ஸ்டாகிராமில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

OruvanOruvan

பத்ம விபூஷண் விருது பெற்ற சிரஞ்சீவிக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா

மெகா ஸ்டார் சிரஞ்சீவி திரையுலகுக்கு ஆற்றிய கலை சேவைக்காகவும் அவர் செய்துள்ள, சாதனைகளுக்காகவும் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவரை கௌரவிக்கும் விதமாக மிக பிரம்மாண்ட விழா ஒன்றை அமெரிக்காவின் கலிபோர்னியா டானா பாயிண்ட்டில் உள்ள ரிட்ஸ் கேரிட்டானில் ரசிகர்கள் நடத்தியுள்ளனர்.

'மஞ்சும்மல் பாய்ஸ்' படக்குழுவினரை நேரில் பாராட்டிய கமல்ஹாசன்

'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் இயக்குநர் சிதம்பரம் மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

OruvanOruvan