29ஆம் திகதி முதல் ஓடிடியில் 'ப்ளூ ஸ்டார்'; 'கார்த்தி 27' படப்பிடிப்பு நிறைவடைந்தது: இன்றைய கலக்கல் சினிமா

OruvanOruvan

Today cinema 25.02.2024

ஓடிடியில் வெளியாகும் 'ப்ளூ ஸ்டார்'!

நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகிய 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் கடந்த மாதம் 25ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான நிலையில்,

அந்தத் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ப்ளூ ஸ்டார் திரைப்படம் வருகிற 29ஆம் திகதி டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவடைந்த 'கார்த்தி 27' படப்பிடிப்பு

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள அவரது 27ஆவது திரைப்படத்தின் பூஜை வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த பூஜை வீடியோவை வெளியிட்டு படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

'ராயன்' திரைப்படத்தில் இணையும் துஷாரா!

நடிகர் தனுஷின் 50ஆவது திரைப்படமான ராயன் திரைப்படத்தில் நடிகை துஷாரா விஜயன் நடிப்பதை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

'Suryas சாட்டர்டே' க்ளிம்ப்ஸ் வீடியோ!

நடிகர் நானி நடித்துள்ள 'Suryas சாட்டர்டே' திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

வெளியானது 'ஜோஷ்வா' திரைப்பட ட்ரெய்லர்!

இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண் நாயகனாக நடித்துள்ள ஜோஷ்வா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.