'மங்கை' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது; 'கங்குவா' திரைப்பட டப்பிங் ஆரம்பம்!: இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 21.02.2024

'கங்குவா' டப்பிங் பணிகள் ஆரம்பம்!

சூர்யா நடிப்பில் உருவாகிவரும் 'கங்குவா' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.

'மங்கை' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!

கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள 'மங்கை' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'யான முட்ட...' பாடல் வெளியாகியுள்ளது.

ரீ ரிலீஸாகும் 'கோ'!

நடிகர் ஜீவா, கார்த்திகா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படமான 'கோ', வருகின்ற மார்ச் 01,2024ஆம் திகதியன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாக இருக்கிறது.

OruvanOruvan

KO Movie Re release

'பி.டி.சார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

ஹிப்ஹொப் ஆதியின் 'பி.டி.சார்' திரைப்படத்தின் படப்பிடித்து நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளது.

கவிஞர் வைரமுத்துவின் பதிவு!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

விருது வென்ற ஷாருக்கான், நயன்தார ஜோடி!

2024ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தாதா சாகேப் பால்கே விருதை ஷாருக்கானும் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாராவும் ஜவான் படத்துக்காக வென்றுள்ளனர்.

OruvanOruvan

Shaaruk khan Nayanthara won the award

நாளை வெளியாகவுள்ள லப்பர் பந்து திரைப்பட பாடல்!

நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்து லப்பர் பந்து திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.