நண்பரின் இழப்பால் சோகத்தில் நடிகர் அஜித்; சடலமாக மீட்கப்பட்ட இயக்குநர்!: இன்றைய சினிமா

OruvanOruvan

Today Cinema Update 13.02.2024

சடலமாக மீட்கப்பட்ட இயக்குநர்!

மலையாள திரைப்பட இயக்குநர் பிரகாஷ் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு.

OruvanOruvan

director death

நண்பரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தல அஜித்!

திரைப்பட இயக்குநரும் சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகனுமான வெற்றி துரைசாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் 8 நாட்களாக தேடப்பட்டு வரும் நிலையில் நேற்று கிடைக்கப்பெற்றது.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் அவரது அன்பு நண்பர் வெற்றி துரைசாமியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளார்.

OruvanOruvan

ajith in funeral

'தளபதி 69' அப்டேட்

விஜய் நடிக்கும் 'தளபதி 69' திரைப்படத்தின் புதிய அப்டேட் விரைவில் வெளியாகும் என்பதை போஸ்டர் ஒன்றின் மூலம் இயக்குநர் வெற்றிமாறன் பகிர்ந்துள்ளார்.

ஹனுமன் படத்தின் ஓடிடி ரிலீஸ்

ஹனுமன் திரைப்படம் Zee5 OTT தளத்தில் வரும் மார்ச் மாதம் 8ம் திகதி சிவராத்திரியை முன்னிட்டு வெளியாக உள்ளது.

ஜவான் படத்துக்கு கிடைத்த பெருமை

ஹொலிவுட் க்ரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஒஸ்ட்ரா விருது வழங்கும் விழாவில் ஜவான் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு நாடுகளிலிருந்து இந்த விழாவுக்கு 500 படங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து தெரிவான ஒரே ஒரு படம் ஜவான் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பவதாரிணி பிறந்தநாளில் கலங்கிய வெங்கட் பிரபு

பவதாரிணியின் பிறந்த நாளான நேற்று, இயக்குநர் வெங்கட் பிரபு பவதாரிணியுடன் எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படத்தை பகிர்ந்து, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் தங்கச்சி பவதாரிணி, நீ சிறந்த மகிழ்ச்சியான இடத்தில் இருப்பாய் என்று எங்களுக்கு தெரியும். மிஸ் யூ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

OruvanOruvan