ஃபேஸ்புக் லைவ்வில் பேசிய கலா மாஸ்டர்; காதலர் தினத்தில் ரீ ரிலீஸாகும் '96': இன்றைய சினிமா

OruvanOruvan

Today cinema 11.02.2024

ஃபேஸ்புக் லைவ்வில் பேசிய கலா மாஸ்டர்!

நேற்று யாழ்ப்பாணத்தில் பல குழப்பத்துக்கு மத்தியில் நடந்து முடிந்த ஹரிஹரன் இசை நிகழ்வுக்குப் பின்னர் நடன அமைப்பாளர் கலா மாஸ்டர் ஃபேஸ்புக் லைவ்வில் நிகழ்ச்சி குறித்த தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

மகனுக்கு முத்தங்களை பரிசளித்த நயன்தாரா!

நயன்தாரா அவ்வப்போது தனது குழந்தைகளுடன் இருக்கும் காணொளிகளை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது காரில் சென்றுகொண்டிருக்கும்போது தனது மகனுக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

'பறந்து போ...' பாடல் வெளியானது!

'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற, ஷபீர் கல்லராக்கல் கதாநாயகனாக நடித்துள்ள பர்த் மார்க், திரைப்படத்தின் இரண்டாவது பாடலான, 'பறந்து போ...' பாடலின் வரிகளடங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

'96' ரீ ரிலீஸ்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற '96' திரைப்படம் வருகின்ற பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

ஓடிடியில் வெளியானது அயலான்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான 'அயலான்' திரைப்படம், தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.