திடீர் மூச்சுத் திணறலால் மரணமடைந்த அஞ்சாதே பட துணை நடிகர்: இன்றைய சினிமா

OruvanOruvan

Today Cinema 10.2.2024

திடீர் மூச்சுத் திணறலால் மரணமடைந்த அஞ்சாதே பட நடிகர்

அஞ்சாதே படத்தில் துணை நடிகராக நடித்த ஸ்ரீதர் என்பவர் இன்று அதிகலை 1.30 மணி அளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார். ஸ்ரீதரின் மறைவு தமிழ் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம் - ரஜினி வாழ்த்து

"என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று நடிகர் ரஜினிகாந்த் 'லால் சலாம்' திரைப்படம் வெற்றியடைய வாழ்த்தியுள்ளார்.

லால் சலாம் படக்குழுவை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்

'லால் சலாம்' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் நடத்தும் ‘நீயே ஒளி' இசை நிகழ்ச்சி

முதன்முதலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இலவச மெட்ரோ வசதியுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.

விக்ரமுடன் இணைந்த எஸ்.ஜே.சூர்யா

விக்ரமின் 62-வது படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.