இரண்டாம் திருமணத்திற்கு சமந்தா சம்மதமா?: வாரிசு நடிகருடன் நெருங்கம் ஏன்?
நடிகை சமந்தாவுக்கு உறவினர் ஒருவருடன் இரண்டாவது திருணம் நடக்கவுள்ளதாக தகவல் வைரலாகி வருகின்றது.
முன்னாள் கணவரான நாக சைதன்யாவுடன், சமந்தா மீண்டும் சேர்ந்து வாழப் போகிறார் என சமூக ஊடகங்களில் பேசப்பட்ட நிலையில், உறவினர் ஒருவரை சமந்தா திருமணம் செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.
பொறமைப்பட வைத்த காதல் ஜோடி
நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
சமந்தா, நாக சைதன்யாவின் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது.
ரசிகர்கள் மட்டும் இன்றி, பிரபலங்களும் பொறாமைப்படும் காதல் ஜோடியாக வளம் வந்த இருவரும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் இந்த காதல் வாழ்க்கை இருவருக்கும் நிலைக்க வில்லை, 2021ம் ஆண்டு நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.
நாக சைதன்யாவை பிரிந்த உடன் அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் இருந்து சமந்தா நீக்கினார்.
நாக சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரின் தந்தை நாகர்ஜுனா முயற்சி செய்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது. எனினும், செய்திகளுடன் அந்த தகவல் நின்று விட்டது.
சினிமாவில் வேகமெடுத்த சமந்தா, நாக சைதன்யா
விவாகரத்தில் பிரிந்த இருவரும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்தனர்.
புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஆடிய நடனம் பலரையும் கவர்ந்தது. தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்த சூழலில் மையோசிடிஸ் நோயால் பாத்திக்கப்பட்டார்.
இதன் காரணமாக பல மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்த அவர் நோயில் இருந்து மீண்ட பிறகு சகுந்தலம் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியடைந்தது.
தொடர் தோல்விகளில் சமந்தா
சாகுந்தலம் படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்தார். அந்தப் படமும் போதிய வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையே சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக கூறி தற்போது விலகியிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக நடிக்காமல் இருக்கும் அவர் மீண்டும் விரைவில் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில், 32 வயதாகும் சமந்தாவுக்கு அவரின் பெற்றோர் திருமணம் செய்து கொள்ள அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம்.
சமந்தாவுக்காக தங்களின் உறவினர் மகன் ஒருவரையே மாப்பிள்ளையாக பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், தனது அடுத்த திருமணம் குறித்த அறிவிப்பை நடிகை சமந்தா உத்தியோகபூர்வமாக அறிவிக்க வில்லை.
மற்றொரு புறம் சமந்தா வாரிசு நடிகர் ஒருவருடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது. இது எந்த அளவு உண்மை என்பது தெரியாது, எனினும், நாக சைதன்யாவுடன் சமந்தா சேர வேண்டும் என்பதே இன்றுவரை ரசிகர்களின் விருப்பமாகவுள்ளது.