ZEE5இல் வெளியாகவுள்ள 'தி கேரளா ஸ்டோரி', நெட்ஃபிளிக்ஸில் 'மிஷன் சாப்டர் 1': இன்றைய சினிமா
மகளுக்கு வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'லால் சலாம்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், மகளை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், 'என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவுள்ள 'மிஷன் சாப்டர் 1'
அருண்விஜய் நடிப்பில் மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனையடுத்து வருகின்ற 16ஆம் திகதியன்று இந்தத் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'லால் சலாம்' திரைப்படம் இன்று வெளியானது!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரத்திலும் ரஜினிகாந்த் கௌரவ வேடத்திலும் நடித்துள்ள 'லால் சலாம்' திரைப்படம் இன்று வெளியானது.
'தி கேரளா ஸ்டோரி'
பல சர்ச்சைகளுக்குப் பின் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் சித்தி இட்னானி, அதா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம், வருகின்ற 16 ஆம் திகதி ZEE5 தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்தத் திரைப்படம் கடந்த ஆண்டு மே 05ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானமை குறிப்பிடத்தக்கது.